தமன்னா இந்த புடவை அணிந்து வந்து தான் ஷூ அடி வாங்குனாரு தெரியுமா?

சமீபத்தில் ஹைதராபத்தில் மலபார் தங்க மற்றும் வைர நகைக்கடையின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நகைக்கடையைத் திறந்து வைப்பதற்காக மிகவும் பிரபலமான தெலுங்கு நடிகையான தமன்னா வந்திருந்தார். தமன்னாவின் வருகையால் அந்த கடையைச் சுற்றி மக்கள் கூட்டம் திரண்டது. தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. பால் போன்ற நிறம் கொண்ட இவருக்கு மேக்கப் அதிகம் போட வேண்டிய அவசியமே இருக்காது. இவரது திரைப்படங்கள் எப்போதாவது ஒன்று வந்தாலும், ரசிகர்களின் மனதில் இடம் பெறும் வகையில் இருக்கும். அவ்வளவு பிரபலமான நடிகை நகைக்கடை திறப்பு விழாவிற்கு அற்புதமான புடவை அணிந்து, பாரம்பரிய தோற்றத்தில் அம்சமாக வந்திருந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் எதிர்பாராதவிதமாக தமன்னாவின் ரசிகர் தான் அணிந்திருந்த ஷூவை தமன்னாவின் மீது வீசியது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இங்கு நடிகை தமன்னா ஹைதராபாத்தில் உள்ள மலபார் தங்க மற்றும் வைர நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்த போது எடுத்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் வருண் பால் கவுச்சர் நடிகை தமன்னா ஹைதராபாத்தில் நடந்த மலபார் தங்க மற்றும் வைர நகைக்கடை திறப்பு விழாவிற்கு டிசைனரான வருண் பால் அவர்களின் கலெக்ஷன்களில் ஒன்றான சிறிய பார்டர் கொண்ட அழகிய பாஸ்டர் பீச் நிற புடவை அணிந்து வந்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *